Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
S.Maria selvam
நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
More news from தமிழ்நாடு and nearby areas
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அன்புராஜ் தலைமையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எஸ் பி சண்முகநாதன் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, அழகர்சாமி, போடு சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் பத்மாவதி கழகசுந்தரம், ஜெயந்தி சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் சண்முகனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேஷ், மாரிமுத்து, ரமேஷ்பாண்டியன், அருண்குமார், செந்தில், விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1
- தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- நாகர்கோவிலில் த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது மேலும் கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 35 சதவீதம் வாக்குகளை பெற்று வரலாற்றில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சி என அந்தஸ்தை பெற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்டம் த.வெ.க. நிர்வாகி தொழிலதிபர் பால்ராஜ் ஏற்பட்டில் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- நாகர்கோவிலில் நடுரோட்டில் கவிழ்ந்த கண்டைனர் லாரி -போக்குவரத்து பாதிப்பு மீட்பு பணி தீவிரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தது அப்பகுதி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் கண்டெய்னர் லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்து உள்ளானதால் திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து ஆனது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கண்டைனர் லாரியை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை1
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1