ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.12000 பறிமுதல் *8 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை நிறைவு* *வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலமாக பரிமாற்றம் செய்யபட்டுள்ள 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தகவல்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் அன்றாட நடைமுறை பணிகளில் லஞ்சப்பணம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் குழுவினர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்த போதே திடீரென மாலையில் இருந்து தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினரின் சோதனை மாலையில் இருந்து இரவிலும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது சோதனையின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதோடு , அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலம் பரிமாற்றம் செய்யபட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.12000 பறிமுதல் *8 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை நிறைவு* *வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலமாக பரிமாற்றம் செய்யபட்டுள்ள 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தகவல்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் அன்றாட நடைமுறை பணிகளில் லஞ்சப்பணம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் குழுவினர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்த போதே திடீரென மாலையில் இருந்து தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினரின் சோதனை மாலையில் இருந்து இரவிலும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது சோதனையின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதோடு , அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலம் பரிமாற்றம் செய்யபட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
- ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்த ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான கட்டனத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்களை வணிகர் சங்க பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருசநாடு மேகமலை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஃபோன் பே, G pay போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், தேனி நகர் பகுதியில் கிடப்பில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்ற வேண்டும், வரும் உள்ளாட்சி தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக போட்டியிட உள்ளதாகவும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 க்கு மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.1
- நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்டு கொள்ளாத தவெக எம்எல்ஏ கூலி உயர்வு மற்றும் நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்டு கொள்ளாத தவெக எம்எல்ஏ வை கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் நெசவாளர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 6 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்தும், பிச்சை எடுத்தும்,சாலை மறியலில் ஈடுபட்டும் கடந்த 10 நாட்களாக நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலையில் தொடர்ந்து போராட்டங்களை நெசவாளர்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போராட்டம் குறித்தும் நெசவாளர்களின் கோரிக்கை குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமகிருஷ்ணாபுரத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த அறப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் தமிழக அரசு தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1
- சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வெளியாக தேர் இழுத்தனர். வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து ஊத்துமலை செல்லும் அரசு பஸ் இரவு நேரத்தில் இயக்கபடாமல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது1
- சின்னமனூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக EB Bill உயர்வு, பொதுமக்கள் அதிர்ச்சி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்வாக மின் கட்டணம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மின்சார வாரியத்தினர் வலியுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த மாதங்களை விட இந்த மாதம் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து, அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியப் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மின் அளவீட்டாளர் செய்த தவறு காரணமாகவே இவ்வளவு தொகை வந்துள்ளது என்றும், இந்த ஒரு முறை வீடுகளுக்கு வந்த மின் கட்டணத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறு செய்த கணக்கீட்டுப் பிரிவு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கட்டாயம் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். ஏழை எளிய மக்கள் வசிக்கும் வீடுகளுக்குக் கூட ₹20,000-க்கும் அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பது, அவர்களிடம் மிகுந்த மன உளைச்சலையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தவறு செய்த மின்சார வாரிய ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் மின் கட்டணத்தை அளவீடு செய்து உரிய கட்டணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மின் கட்டணத்தைச் செலுத்தப் பொருளாதார வசதி இல்லாததால் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி: மாடசாமி பொதுமக்கள் குச்சனூர்1
- தேனி மாவட்டம் போடி அருகே திறந்தவெளி கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சன்னாசிபுரம் செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த இப்பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற தனது பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வர கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் பசுமாடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. சுமார் 30 அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த போர்வெல் கிணறு பாதியிலேயே கைவிடப்பட்ட ஒன்றாகும். இதன் வாய் பகுதி பலவீனமான தகரத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் கால் வைத்த பசுமாடு தகரம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குக் போராடியுள்ளது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் கண்ணன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்புப் பணிக்கு முன்பே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மிக்க சிரமத்திற்கு இடையே கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்த கன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்று ஈனவிருந்த பசுவும் அதன் கன்றும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கிணற்றில் தகரம் மட்டுமே மூடப்பட்டிருந்ததால், பலமுறை கால்நடைகள் விழுந்து மீட்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கச் சாலையோரத்தில் உள்ள இந்த ஆபத்தான கிணற்றை உடனடியாக நிரந்தரமாக உயரமான தடுப்பு சுவர் உயரமாக அமைத்து இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாதவாறு வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்குச் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.1