Shuru
Apke Nagar Ki App…
Arasu Malar Editor V.Balamurugan
More news from தமிழ்நாடு and nearby areas
- *மத தீவிரவாதிகளை தடுப்போம்.மதவாதத்தை ஒழிப்போம்* *மத தீவிரவாதிகள் அரசியலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.* *சிந்தித்து செயல்படுங்கள்*. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையாக செயல்படும் இடம் திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் கொன்னை மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்த காடு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தெக்கன் பகுதியில் அதாவது இன்றைய குமரி மாவட்ட பகுதியில் காசநோய் பெரிதாக பரவி வந்த காலத்தில் காசநோய்க்கென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் தேவை இருந்தது......... 1937 ஆம் ஆண்டு சித்திரை திருநாள் மன்னராக இருந்தபோது நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதியில் காசநோய்க்கென்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. அன்று அந்த மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும் பலரும் கிறித்தவம் ஏற்ற மக்கள். அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மிஷனரி நபர்கள் குடியிருந்த பகுதியாக இருந்ததாலும் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாலும் அதில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கிறித்தவ ஆலயம் கட்ட அனுமதி தந்தது.......... மருத்துவமனை தொடங்கிய காலம் தொட்டு இயங்கி வந்த அந்த ஆலயம் பிற்காலத்தில் காசநோய் மருத்துவமனை செயலிழந்ததோடு செயல்பாட்டில் இல்லாமல் போனது. இரண்டாயிரத்தில் நாகர்கோவில் கோட்டாரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றப்பட்டு இன்று மருத்துவ கல்லூரியாக உயர்வு பெற்று இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கிய காலத்தில் அந்த கிறித்தவ ஆலயம் இருந்த பகுதி மரண ரெக்கார்டுகள் வைக்கும் அறையாக மாறிப்போனது......... இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்குள் சிறிய அளவிலான ஒரு இந்து வழிபாட்டு தலம் உள்ளது. சில கிறித்தவ அமைப்புகள் அதை காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் தந்த நிலத்தில் கட்டப்பட்டு இன்று வழக்கில் இல்லாமல் இருக்கும் அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்......... இந்த கோரிக்கை ஏற்புடையதா என்றால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் தான் தேவை என்றாலும் மக்களின் ஆன்மீக தேடலுக்கு அவரவருக்கு தேவை . இந்துக்களுக்கு ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் இருக்க கிறிஸ்தவர்களுக்கும் ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் தேவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி ஆன்மீக தேடலை முன்னிறுத்தும் போது அங்கே ஒரு சமய வழிபாட்டு இடங்கள் வைப்பது தவறு. ஏற்கனவே இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆலயம் திறக்கப்படலாம் கூடவே இஸ்லாமியருக்கான தொழுகை மையமும் திறக்கலாம். ஒரு பல்மத வழிபாட்டு அறையாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு வழிபாட்டு அறை ஒதுக்கலாம்............. ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மத கலவரத்தை மட்டுமே நம்பி குமரியில் தேர்தல் களம் காணும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மிகப் பழமையான இந்த கிறித்தவ ஆலய பிரச்சனையே கையில் எடுத்திருக்கிறது....... குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் குளச்சல் தொகுதியில் மக்கள் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்க நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் ஆலய பிரச்சனையை தூக்கித் திரிவது வெட்கக்கேடான செயல்......... குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலமும் யானை தெருக்களில் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இல்லாத இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தொடங்கியிருக்க வேண்டும்....... மேற்கு மாவட்டத்தில் கேரள தொடர்புகள் உள்ள சாதிகள் நெருக்கமாக வாழும் பகுதியில் மட்டும் தான் இது இருந்தது. பிற்காலத்தில் யானைகளை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துவதற்கான விதிகள் கடினமாக்கப்படவும் யானை வளர்ப்பு பெரும் பொருளாதார சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அதுவும் நீர்த்துபோனது......... இப்படியிருக்க மீன்பிடி, விவசாயம், தொழில் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிரம்பி இருக்கும் குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் இரண்டு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் களம் காண்கிறார்..... ஒன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குள் பழமையான அந்த ஆலயத்தை திறக்கவிடமாட்டேன் என்கிறார். இரண்டு பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலம் நடத்துவேன் என்கிறார்..... ஒரு லட்சம் இந்துக்களும் ஒன்றரை லட்சம் கிறித்தவர்களும் இருபத்தைந்தாயிரம் இஸ்லாமியரும் இணக்கமாக வாழும் தொகுதியில் அவரது சிந்தனை ஒருங்கிணைந்த மக்கள் வளர்ச்சியை நோக்கியதாக இல்லை. எப்படியாவது மதத்தை முன்னிறுத்தி மதம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்து வாக்குகளை ஒருங்கே பெற்று வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.......... குமரி மாவட்ட தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படவேண்டிய முக்கிய வேட்பாளராக தான் வக்கீல் சிவக்குமார் உள்ளார்...,. தீர்ப்பை குளச்சல் தொகுதி மக்கள் எழுதட்டும்..... ஆக மொத்தம் BJP வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தீய சக்தி ஆகும்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) 12 மணிக்கு அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஆம்பூர் 36- வார்டு வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- Post by சந்திரசேகர். D1
- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.1
- Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN3
- Post by Arasu Malar Editor V.Balamurugan1