logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை அருகே அகரக்கடம்பனூர் அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள், ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்* ஆ.லெனின், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் அகரகடம்பனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள் ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவனாது கடந்த 15 ம் தேதி தீர்த்தம் எடுத்து வருதல் பெருமாள் பிரார்த்தனை, விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்ய பூஜை,ரஷாபந்தன ப்ரதிஷ்டை நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாராதனகள் நடைப்பெற்று வந்தது. இன்று கோ பூஜைகள் நடைப்பெற்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பட்டாச்சிரியர்கள், சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து வந்து வேதமந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

7 hrs ago
user_Srinivasan
Srinivasan
கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
7 hrs ago
73e5820e-7622-464f-9ced-9a70446bdd0d

நாகை அருகே அகரக்கடம்பனூர் அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள், ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்* ஆ.லெனின், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் அகரகடம்பனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு சீதா லெஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ ராமஸ்வாமி பெருமாள் ஸ்ரீ சர்வசித்தி

b35e3e44-e88e-4829-95db-914cd7e2f1fe

விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவனாது கடந்த 15 ம் தேதி தீர்த்தம் எடுத்து வருதல் பெருமாள் பிரார்த்தனை, விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்ய பூஜை,ரஷாபந்தன ப்ரதிஷ்டை நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன்

67e40e69-ca84-458e-a6ed-5daab2138da2

பூர்ணாஹூதி தீபாராதனகள் நடைப்பெற்று வந்தது. இன்று கோ பூஜைகள் நடைப்பெற்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பட்டாச்சிரியர்கள், சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து வந்து வேதமந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை தெற்கு கடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (15-09-2026) மாலை மங்கள வாத்தியத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் மற்றும் கடாகர்ஷணத்தைத் தொடர்ந்து முதற்கால யாகபூஜை நடைபெற்றது. இரவில் விமானகலசம், யந்திரம் மற்றும் மூலவர் மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை (16-09-2026) காலை 7.05 மணிக்கு மேல் சூர்யகும்ப பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, இரண்டாம்கால யாகபூஜை, நாடிசந்தானம், ஸ்பார்சாகுதி மற்றும் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் யாத்ராதானம் செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி, அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் விமான கலசத்திற்கு புனிதநீரூற்றி மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தகோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் மற்றும் அருசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவினை கோவில் நிர்வாக குழுவினரால் சிறப்பான முறையில் நடைபெற்றது.
    1
    செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை தெற்கு கடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (15-09-2026) மாலை மங்கள வாத்தியத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் மற்றும் கடாகர்ஷணத்தைத் தொடர்ந்து முதற்கால யாகபூஜை நடைபெற்றது. இரவில் விமானகலசம், யந்திரம் மற்றும் மூலவர் மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து புதன்கிழமை (16-09-2026) காலை 7.05 மணிக்கு மேல் சூர்யகும்ப பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, இரண்டாம்கால யாகபூஜை, நாடிசந்தானம், ஸ்பார்சாகுதி மற்றும் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் யாத்ராதானம் செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி, அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் விமான கலசத்திற்கு புனிதநீரூற்றி மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இவ்விழாவில் திரளான பக்தகோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் மற்றும் அருசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவினை கோவில் நிர்வாக குழுவினரால் சிறப்பான முறையில் நடைபெற்றது.
    user_Packya Rasu
    Packya Rasu
    Media company திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில் மனை, புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, கோவில் மனை மற்றும் பல்வேறு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவில் மனை, ஆற்றுப் புறம்போக்கு, சாலைப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தினக்கூலியை ரூ.700-ஆக உயர்த்தி, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்
கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில் மனை, புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா  வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..
நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, கோவில் மனை மற்றும் பல்வேறு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் 
கோவில் மனை, ஆற்றுப் புறம்போக்கு, சாலைப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தினக்கூலியை ரூ.700-ஆக உயர்த்தி, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் 
விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர்  சுப்பிரமணியன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    6 hrs ago
  • நாகப்பட்டினத்தில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் அருகே கோட்டை வாசல் படியில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமையிலும் செயலாளர் புபேஷ் குப்தா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் பங்கேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்
    1
    நாகப்பட்டினத்தில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நாகப்பட்டினம் அருகே கோட்டை வாசல் படியில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமையிலும் செயலாளர் புபேஷ் குப்தா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் பங்கேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்
    user_Srinivasan
    Srinivasan
    கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • முத்துப்பேட்டையில் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 20-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பாக இன்று போலீசார் சார்பில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அணிவகுப்பாக புறப்பட்டு, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் செம்படவன்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் இந்த ஒத்திகையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஊர்வலப் பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
    1
    முத்துப்பேட்டையில்  காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை 
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 20-ம் தேதி விநாயகர்  ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பாக இன்று போலீசார் சார்பில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அணிவகுப்பாக புறப்பட்டு, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் செம்படவன்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் இந்த ஒத்திகையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஊர்வலப் பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
    user_BARATHI
    BARATHI
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு•
    40 min ago
  • கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி


கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன்  இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்
    1
    சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 சிலைகள் இப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடும் கோடை வெப்பத்தால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் எப்போதும் ஆழமாக இருக்கும் குமார உடைப்பு வாய்க்கால் பள்ளம் ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலுமாக வறண்டுவிட்டன. இதனால் சிலைகளை கரைப்பதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பக்தர்கள் நீர்நிலைகளைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் மாற்று ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திடம் பேசி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 6-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு வந்து குமார உடைப்பு பள்ளத்தில் செயற்கையாக நிரப்பினர். நீர்நிலைகள் வறண்ட நிலையில், காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாகக் கரைக்கப்பட உள்ளன.
    1
    சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு

சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 சிலைகள் இப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடும் கோடை வெப்பத்தால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் எப்போதும் ஆழமாக இருக்கும் குமார உடைப்பு வாய்க்கால் பள்ளம் ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலுமாக வறண்டுவிட்டன.
இதனால் சிலைகளை கரைப்பதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பக்தர்கள் நீர்நிலைகளைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சேத்தியாத்தோப்பு காவல்துறையினர்  மாற்று ஏற்பாட்டை செய்தனர். அதன்படி
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திடம் பேசி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 6-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு வந்து குமார உடைப்பு பள்ளத்தில் செயற்கையாக நிரப்பினர். நீர்நிலைகள் வறண்ட நிலையில், காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாகக் கரைக்கப்பட உள்ளன.
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 
20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.