Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா லேஅவுட் பகுதியிலிருந்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக 30-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அந்த சரக்கு வேன் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Vel
திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா லேஅவுட் பகுதியிலிருந்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக 30-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அந்த சரக்கு வேன் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.1
- சேலத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அவர் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.1
- விரைவில் அண்ணாமலை புதிய கட்சி அறிவிக்க உள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'WE THE LEADERS' அமைப்பின் முசிறி தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்தின் அருளவாடி கிராமத்திற்குள் இன்று பகல் நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். பகல் நேரத்திலேயே கிராமத்தின் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதியை ஒட்டியே உலா வருவதால் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கரூர் ஆட்டையாம்பரப்பு அருகே அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் ஒன்று, டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவ்வித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1