Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்
CHANDRA SEKAR
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.1
- வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் விழா மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் 293 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு போடி நகரம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர்சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் அரண்மனை வளாகம் முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு போடி சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலுநாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் தமிழகமெங்கும் இன்று சுதந்திர போராட்டவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய 267 வது பிறந்தநாள் விழா மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் 293வது பிறந்தநாள் விழா பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை வளாகம் முன்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தனது தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தனது சட்டமன்ற அலுவலக முன்பு வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சி யாருடைய திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தனது மரியாதையை வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்ட ஓ .பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் கூறினார் . ஓபிஎஸ் உடன் இருந்து ஜேசி டி பிரபாகரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அண்ணன் ஜேசிபி பிரபாகரன் எங்களை விட்டு நீண்ட தூரம் சென்று விட்டார் அவர் எங்களை விட்டு விலகி சென்று பல மாதங்கள் காலங்களாகிவிட்டது ஆனாலும் எங்களுடன் தொடர்பில் உள்ளார் என்று கூறினார் . தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிற்கு மூன்று சீட்டுகள் ஒதுக்கப்பட்டதாக பற்றி கேள்வி எழுந்ததற்கு தவறான செய்தி அதை யாரும் நம்ப வேண்டாம் அது வதந்தி என்றும் கூறினார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியமா என்பது குறிப்பு கேட்டதற்கு சாத்தியமாக வேண்டும் சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே அதற்காகத்தான் இந்த போராட்டம் என்று மக்களுடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். அதிமுக ஒருங்கிணை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையின் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார் அது பற்றி உங்கள் கருத்து என்பது என்ன என்று கேட்டதற்கு , அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான் என்று கூறினார் . மீண்டும் தேசியஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பியதற்கு நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஆகிவிட்டது நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் களம் நிலவரங்களை தெரிவித்து வந்ததாக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கிய பொழுது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்பது நடிப்படையில் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அவைகள் மீறிவிட்டது, மீண்டும் எம்ஜிஆர் உடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம் கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இயங்கி வருகிறோம், கழகத்தின் தொண்டர்கள் தங்கள் வழங்கி தேர்தலில் ஓட்டளித்து தேர்தலில் நடைமுறையில் விதிமுறைகள் படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி ஆனால் அந்த சட்ட விதிகளை மீறி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் வழக்கத்துடன் எடுக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது . உச்ச நீதிமன்றம் வரை நாங்கள் சென்று இதற்கான போராட்டங்களை கையில் எடுத்து இரட்டை இலையையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். இதுகுறித்து சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்புகளையும் வழங்கி உள்ளது விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்பது கூறி தனது பேட்டி நிறைவு செய்தார். பேட்டி : ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர். போடி சட்டமன்ற உறுப்பினர்.1
- அரசியல் காரணத்திற்காக கிரிவலம் மேற்கொள்ளவில்லை பலமுறை திருச்செங்கோடு வந்துள்ளேன் இந்த முறை பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலத்தில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி உள்ளோம்.67 லிலும் 77 லிலும் நடந்ததைபோல் பாமரர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் இட ஒதுக்கீடு உள்ள தொகுதிகள் அல்லாத பொது தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்வேட்பாளராக ஆவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.அதிமுகவை சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல யார் நல்லவர்கள் யார் சிறந்த கொள்கை உடையவர்கள் என்பதை அறிந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேர்கிறார்கள்.நிரந்தர முதல்வர் என்று சொல்வது நகைச்சுவை அல்ல 2026 தேர்தலில் த வெக மகத்தான வெற்றி பெறும் விஜய் முதல்வராவார் தொடர்ந்து நிரந்தர முதல்வராக இருப்பார் கிரிவலத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் பேட்டி* திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் திருவண்ணாமலைக்கு நிகராக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத பௌர்ணமி தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அருண்ராஜ் கிரிவளத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்றதோடு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையடிவாரம் ஆறுமுகசாமிகோவிலில் சாமி தரிசனம் செய்து மரியாதையை ஏற்றுக் கொண்டுநெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு பின் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் கிரிவலம் தொடங்கினார். நாமக்கல் ரோடு சந்திப்பில் கிரிவலப் பாதை தொடங்கும் இடத்தில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் மலையடிகுட்டைப் பகுதிகளும் வேலூர் ரோட்டில் ஒரு பகுதியிலும் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அருண்ராஜ் கலந்து கொண்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினார். அருண்ராஜ் கிரிவலம் வருவதை ஒட்டிவிஜயின் பேச்சுகள் ஒளிபரப்பவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையிலும்அன்னதானம் வழங்கப்பட்ட மூன்று இடங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் எல்இடி தரை செயல்படவில்லை.அன்னதானம் நடைபெற்ற இடங்களிலோ அல்லது கிரிவலப் பாதைகளிலோ எங்கும் கட்சி கொடிகள் எதுவும் நடப்படவில்லை பேனர்கள் வைக்கப்படவில்லை மேம் அறக்கட்டளை என்கிற பேனர் ஒன்று மட்டும் வைக்கப் பட்டிருந்தது.ஆறுமுகசாமி கோவில் அருகில் கிரிவலம் தொடங்கிய தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என வேண்டிய கிரிவலம் செல்கிறோம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம்.எனக்கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக இந்த கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆனால் நீங்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை இப்பொழுது அரசியல் காரணங்களுக்காக கிரிவலம் கலந்து கொள்கிறீர்களா என கேட்டபோது பலமுறை நான் திருச்செங்கோடு வந்திருக்கிறேன் கிரிவலம் செல்ல வேண்டிய வாய்ப்பு அப்போது உருவாகவில்லை என்று பௌர்ணமி தினத்தன்று வந்திருப்பதால் கிரிவலம் செல்கிறேன் கிரிவலம் செல்லும் போது பக்தர்களுக்கு எங்கள் வெற்றியையும் எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்கிற வேண்டுதலையும் வைத்து அன்னதானம் வழங்குகிறோம் அவ்வளவுதானே தவிர இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லைதெரிவித்தார் தொடர்ந்து 67 மற்றும் 77 போல் நாங்கள் ஆட்சியமைப்போம் என கூறுகிறீர்கள் 67 பாமரர்கள் ஏழைகள்குதிரை வண்டி ஓட்டுபவர்கள் சைக்கிள் கடைக்காரர்கள் டீக்கடைக்காரர்கள் போன்றவர்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள் இதே போல் 77 இல் படித்தவர்கள் பண்பாளர்கள் பலரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள் அதுபோல் உங்கள் கட்சியிலும் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது நிச்சயம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என கூறினார் தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உங்கள் கொள்கை என கூறும் நீங்கள் இட ஒதுக்கீடு இல்லாத தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் இதையெல்லாம் நடக்கும் நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்போம் என கூறினார் அதிமுகவிலிருந்து பலரும் உங்கள் கட்சியில் வந்து சேர்வதால் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியது போல் தான் உள்ளது என கேட்டதற்குஅப்படியெல்லாம் இல்லை எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களை பிடித்தவர்கள் எங்கள் வெற்றியை உறுதி செய்தவர்கள் யாருடன் இருந்தால் நல்லது என நினைத்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள் நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என கூறினார் மேலும் இன்று கூட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஒன்றிய பெருந்தலைவர் இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார் எனக்கு கூறினார்தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவிர வேறு யாரும் பெரிய பிரமுகர்கள் வராத நிலையில் அமமுகவுக்கு,ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தான் உங்கள் கட்சியில் இணைகிறார்கள் இது எப்படி அண்ணா திமுகவிலிருந்து வருவதாகவும் எனக் கேட்டபோது அதிமுகவில் சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எங்களை நாடி வருபவர்களை அரவணைத்து செல்கிறோம் அவ்வளவுதான் அவர்களும் அதிமுகவில் இருந்தவர்கள் தான் என கூறினார்.திமுக தான் எங்கள் அரசியல் எதிரி என திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் நீங்கள் ஊழல் புகாரில் சிறை தண்டனை பெருமளவுக்கு போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன் எனக் கேட்டபோது இது குறித்து ஏற்கனவே பேசி ஆகிவிட்டது என கேள்வியை தவிர்த்தார்.தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என தாவிக்கை நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்ததை குறித்து கேட்டபோது அமைச்சர் சாமிநாதன் இது நகைச்சுவையாக உள்ளது எனக் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையாக இருக்கலாம் வரும் 2026 தேர்தலில் தாவீகா மகத்தான வெற்றி பெறும் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வருவார் தொடர்ந்து நிரந்தரம் முதல்வராக இருப்பார் எனதெரிவித்தார்.நிகழ்ச்சி என்பது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் உடன் இருந்தனர்1
- புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஒத்திகை தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பள்ளத்தி வயல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அதற்கான ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மேடை அருகே ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தளம் அமைத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் வந்து மேடை அருகே நிறுத்தப்பட்டது.1
- சீறும் காளைகள். முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில்.1
- தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் C. சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. தர்மபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில், தர்மபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வைத்தார் மாவட்டத் தலைவர் சரவணா அவர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. ஜெயசூர்யா, OBC அணி மாவட்ட தலைவர் திரு. சசிகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு. அருண், தர்மபுரி பாஜக மாவட்ட பொது செயலாளர் திரு. பிரவின் மற்றும் கணேசன், தர்மபுரி பாஜக மாவட்ட துணை தலைவர் திருமதி. சரிதா, தர்மபுரி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. கலையரசி விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன். தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன்ராஜ், அரூர் நகர தலைவர் திரு. ரூபன், மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு .சக்திவேல் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது1
- வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு, முனியப்பன் கோவில் பிரிவு அருகே இன்று இன்று ஆம்புலன்ஸ் டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் மூன்று பேர் காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்.1
- தனது காரை முற்றுகையிட்டு போராடிய போராட்டக்காரர்களுடன் கைகலப்பில் இறங்கிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவானின் திருக்கோவிலில் பக்தர்களுக்காக அமரும் இடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை வழிமறித்து தங்கள் கிராமத்தில் மின் மயானம் வேண்டாம் என கூறி மனு அளிக்க வந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர் தரப்பில் எங்கள் ஊருக்கு மின் மயானம் வேண்டும் என ஒரு தரப்பினர் கோஷமிட்டு வந்தனர். இருதரப்புக்கு இடையே பேச்சு வார்த்தை செய்யும் போது வாக்குவாதம் ஏற்பட்டதால் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அந்த இடத்திலிருந்து தனது காரில் ஏறி கிளம்பும் பொழுது போராட்டக்காரர்கள் காரை வழிமறித்தனர். அப்பொழுது பேசிய நபர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் காரில் இருந்தவாறு வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்து இறங்கி வாக்குவாதம் செய்த வரை தாக்க கையை ஓங்கி கூட்டத்துக்குள் சென்று தாக்க முற்பட்டார். மேலும் சத்தமாக கத்தியபடி வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனே அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினரை காரில் ஏற்றி அவசரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்தப் பிரச்சினையாள் அடிக்கல் நாட்ட வந்த வேலையை விட்டு விட்டு அந்த பணியை செய்யாமல் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.1