Shuru
Apke Nagar Ki App…
MATHEWKUTTY
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by MATHEWKUTTY1
- கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.1
- Post by Ana_d_armas_10k1
- Post by Kali1
- சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.1
- சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- Post by MATHEWKUTTY1