கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”,
“No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு
இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.1
- பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மது போதையில் முதியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் தனக்கு முதியோர் பணம் வழங்கவில்லை என ஆத்திரத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட முதியோர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் முதியவர் ஒருவர் தனது ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது பெயர் திருத்துவதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அவரை ஆதார் மையத்தில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த முதியோர் மது போதையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் அங்குள்ள அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் மேலும் தனக்கு முதியோர் பணம் வழங்குவதில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன என ஆபாச வார்த்தைகளால் பேசி ஏன் பணம் தர மாட்டீர்கள் என சரமாரியாக மது போதையில் கேள்விகளை எழுப்பினார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சருமத்துக்குள்ளாகியுள்ளனர் மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மது போதையில் முதியவர் கடும் ரகலையில் ஈடுபட்டனர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த முதியோரை விசாரித்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று காம்பவுண்ட் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டு சென்றுள்ளனர் மேலும் மது போதையில் முதியவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் திமுக ஆட்சியின் அவல நிலை பொதுமக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைதான் தற்போது தமிழக முழுவதும் பரவியுள்ளது தொடர்ந்து பெரிய வளம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருவதாலும் இது போன்ற போதைக்கு அடிமையாகி தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் முதியவர்கள் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது1
- தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.2
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்2
- அக்கா எங்க போனாங்க #maatramworld #publicintrest #publicresponse #viralshort #politics #public1
- இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.1
- 2626ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவகோட்டை உட்கோட்ட காவல் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். தேவகோட்டை நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிறைவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பின் போது கையில் துப்பாக்கி ஏந்தியபடி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பேரணியாக வந்தனர்.1
- தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1