Shuru
Apke Nagar Ki App…
ஆனைமலை அடுத்த டாப்லிப்பில் இருந்து பரப்பிகுளம் செல்லும் வழியில் இரண்டு புள்ளி மான்கள் சண்டையிட்டு கொள்வதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார்.
Senthilkumarankumaran
ஆனைமலை அடுத்த டாப்லிப்பில் இருந்து பரப்பிகுளம் செல்லும் வழியில் இரண்டு புள்ளி மான்கள் சண்டையிட்டு கொள்வதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார்.
- User4191Puducherry🤝2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள். நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.1
- Post by Mr Mr. Gandhi1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1
- பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கடலூர் : வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் கூட்டு ரோட்டில் பசுமை புரட்சி திட்டம் கொண்டாடபட்டது அப்போது விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா, புங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கபட்டது இந்நிகழ்ச்சிக்கு வேப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முன்னால் மாவட்ட ஆளுநர் ஜனனி தாசன் முன்னிலையில் விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அன்புக்குமரன் விவசாயிகளுக்கு மரகன்றுகளை வழங்கினார் இதில் வேப்பூர் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, கார்த்திகேயன், சின்னதுரை, அமானுல்லாகான், செல்வராசு, சிங்கதுரை, சுடரொளி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்4
- ஆனைமலை அடுத்த டாப்லிப்பில் இருந்து பரப்பிகுளம் செல்லும் வழியில் இரண்டு புள்ளி மான்கள் சண்டையிட்டு கொள்வதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார்.1
- Post by Mr Mr. Gandhi1
- வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5200 - ரூ.12,500 வரை 22 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.6,000 - 47,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாகவும், புத்தாண்டு நடைபெறுகிறது முன்னிட்டு விற்பனை சூடு பிடித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.1