Shuru
Apke Nagar Ki App…
Omsakthi Sankar
- Omsakthi SankarThoothukkudi, Tuticorin🙏18 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- 05.03.2026 வியாழக்கிழமை மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில் காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!1
- Post by Omsakthi Sankar1
- படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்1
- நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது போர் தாக்குதலை நிறுத்த வேண்டியும் கொமோனியின் படுகொலையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கா இஸ்ரேல் நாட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.1
- மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.1
- சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.1
- தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்1